நாகர்கோவில் அருகே டெம்போ-ஸ்கூட்டர் மோதல்; தொழிலாளி பலி


நாகர்கோவில் அருகே டெம்போ-ஸ்கூட்டர் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 April 2023 3:06 AM IST (Updated: 19 April 2023 1:18 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே டெம்போ-ஸ்கூட்டர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 55). இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அப்துல் ரகுமான் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மூத்த மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மகளின் குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். வருகிற 27-ந்தேதி மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்கூட்டரில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். களியங்காடு பகுதியில் வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த டெம்போ ஒன்று ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக அப்துல் ரகுமானின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அப்துல் ரகுமான் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்துல் ரகுமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story