229 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி


229 தற்காலிக பட்டாசு கடைகள்   அமைக்க அனுமதி
x

229 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் பலர் விண்ணப்பித்தனர். மாநகர போலீஸ் கமிஷனருக்கு உட்பட்ட பகுதியில் 111 பேர் விண்ணப்பித்தனர். அவினாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் இருந்து 128 பேர் விண்ணப்பித்தனர்.

மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்கினார். புறநகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வினீத் அனுமதி வழங்கினார். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா என்றும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட சான்றுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு பிறகு திருப்பூர் மாநகர பகுதியில் 110 பேருக்கு தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் புறநகர் பகுதியில் 119 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 229 கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story