சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
நீடாமங்கலத்தில் இன்று நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர்
நீடாமங்கலம்:
பழைய நீடாமங்கலம் புதுபாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சிலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புதுப்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று (புதன்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
பின்னர் இதற்கான சமாதான கூட்டம் நீடாமங்கலம் தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், ஜான்கென்னடி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story