ராசிபுரம் அருகே அக்கரைபட்டியில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம் அருகே அக்கரைபட்டியில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல்
ராசிபுரம்:
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மல்லசமுத்திரம், வையப்பமலை, பெரிய மணலி, சின்ன மணலி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னாம்பள்ளி, சவுதாபுரம், நாட்டாமங்கலம், எலச்சிபாளையம், கோக்கலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவினாசி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 1,947 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8,250-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,761-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story