தென்காசி: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ...!
தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலிஅருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இரு தினங்களுக்கு முன் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story