தென்காசி மாவட்டத்தில் போலீசாருக்கு எழுத்து தேர்வு


தென்காசி மாவட்டத்தில் போலீசாருக்கு எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் போலீசாருக்கு எழுத்து தேர்வு நடந்தது.

தென்காசி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் 9,417 ஆண்கள், 2,400 பெண்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,818 பேர் எழுதினர். இந்த மையங்களை தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி. ஜெயகவுரி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மையங்களுக்கு 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை சூப்பிரண்டுகள், 37 இன்ஸ்பெக்டர்கள், 140 சப்- இன்ஸ்பெக்டர்கள், 940 போலீசார் என மொத்தம் 1,133 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

-----------


Next Story