தென்காசி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சி மாநாடு


தென்காசி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சி மாநாடு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:56+05:30)

தென்காசி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சி மாநாடு சங்கரன்கோவிலில் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தென்காசி மாவட்ட மாநாடு சங்கரன்கோவிலில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளையரசு, மாநில செயலாளர் பசும்பொன், மாணவ அணி மாநில செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட நிர்வாகி சுப்புராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மாநாட்டில் விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் சோனமுத்து, மாவட்ட பொருளாளர் ஆறுமுகசாமி, தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முருகேசபாண்டியன், சுந்தர், ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story