தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது


தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது

தென்காசி

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் இந்த தேர்வை மொத்தம் 18,299 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 64 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 1,322 தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 5 பறக்கும் படை குழுவினரும், 150 நுண்கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தென்காசி அரசினர் மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொண்டார்.


Next Story