தென்காசி: புதிய தார் சாலை கையோடு பெயர்ந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி !
தென்காசியில் தரமற்ற தார்சாலை கையோடு பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தரமற்ற தார்சாலை கையோடு பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சிதம்பராபுரத்தில் இருந்து உசிலங்குளம் ரெங்கசமுத்திரம் வரை தார்சாலை சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த வாரம் புதிதாக போடப்பட்டது. ஆனால் சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் அந்த தார்சாலையை அவர்கள் கைகளாலேயே அகற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தரமற்ற சாலையை போட்ட ஒப்பந்ததாரர்கள், சாலையை ஆய்வு செய்யாமல் சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Related Tags :
Next Story