டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: உத்தர பிரதேச அணி வெற்றி


டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: உத்தர பிரதேச அணி வெற்றி
x

டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேச அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

குன்னூர்

தமிழ்நாடு டென்னிஸ் பந்து கழகத்தின் சார்பில் தேசிய அளவிலான ஆண்கள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி குன்னூர் அருகே உள்ள கேத்தி தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மத்தியபிரதேசம், பெங்களுர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.3 நாட்கள் நடைபெற்ற ஆண்களுக்கான போட்டிகளில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூர்வாங்ஜல் அணி முதலிடத்தையும், 2-ம் இடத்தை உத்தர பிரதேசம் அணியும், 3-ம் இடத்தை கேரளா அணியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க பொது மேலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊட்டி எம்.எல்.ஏ. கணேசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் முனிரத்தினம், அமைப்பாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் டாக்டர் கங்காதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story