தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை அருகே தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மழை மாரியம்மன் கோவில்

திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தில் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது.

குடமுழுக்கு

இதை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கோவில் ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை 5 ஊர் கிராம கமிட்டியினர், ஊராட்சி மன்றம், மருளாளிகள் மற்றும் நன்கொடையாளர்கள் செய்து இருந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமக்கோட்டை போலீசார் செய்திருந்தனர்.


Next Story