தேரிக்குடியிருப்பு அரசுபள்ளி மாணவர்கள் சாதனை


தேரிக்குடியிருப்பு அரசுபள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேரிக்குடியிருப்பு அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 38 மாணவ, மாணவிகள் எழுதியதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவி வான்மதி 535 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவர் இன்பராஜலிங்கம் 500 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.


Next Story