அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:16:31+05:30)

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் சந்தோஷ் என்பவர் வேதியியல் பிரிவு பாடங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மாணவி ஒருவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் ஆசிரியரை தாக்கியதாகவும் கூறப்பட்டதை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அழகன்குளம் அரசு பள்ளிக்கு நேரடியாக சென்று பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கிராம பிரமுகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் விசாரணையில், ஆசிரியர் மாணவியை திட்டியது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் சந்தோஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களிடமும் இதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story