தேசிய நல்லாசிரியர் பணியிடை நீக்கம்


தேசிய நல்லாசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நல்லாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் ராமச்சந்திரன் (வயது 38). இவர் கடந்த செப்டம்பர் மாதம், ஜனாதிபதியிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருந்தார்.

தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் அந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்களை போன்று சீருடை அணிந்துதான் பணிக்கு சென்று வந்தார்.

இவரது அண்ணன் பஞ்சாட்சரம், மதுரை, ராமநாதபுரத்தில் வரி தொடர்பான தகவல்கள் அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவர் பல்வேறு நபர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு புகார்கள் வந்தன. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ேமல்விசாரணை நடத்தியதில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரான ராமச்சந்திரனின் வங்கி கணக்கிற்கு, அவருடைய அண்ணன் பஞ்சாட்சரம் நடத்திய நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை முறைகேடாக பண பரிமாற்றம் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story