ஆசிரியர் பணியிடை நீக்கம்


ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் உள்ள அரசு நிதிஉதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன் (வயது 53). இவர் ஈரோடு மாவட்டம் பவானி செம்மாம் பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் (50) என்பவரது மகன்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லையாம். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ஈரோட்டிலேயே விசாரிக்க வேண்டும் என ஜெகதீசன் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் பணியாற்றிய பள்ளியின் கல்வி குழுவினர், மாவட்ட கல்வி அலுவலர் பாலு முத்து உத்தரவின்படி இளங்கோவனை பணி இடை நீக்கம் செய்தனர்.


Next Story