ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சித்தேரிக்குப்பம் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்


ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட    சித்தேரிக்குப்பம் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சித்தேரிக்குப்பம் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்

விருத்தாசலம்,

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்

வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, குடிமை பொருள் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக லாரி டிரைவரான வேலூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விற்பனையாளர் பணியிடை நீக்கம்

விசாரணையில், சித்தேரிக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ரேஷன் அரிசியை ஐவதுகுடியில் பதுக்கி வைத்து லாரியில் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சின்னபண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தகுமார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட விற்பனையாளர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story