வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து...!


வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து...!
x

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் இன்று வழக்கம் போல் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மாலை 5 மணி அளவில் கார்டிங் எந்திரத்தில் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்த வந்த அவர்கள் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் பஞ்சு மூட்டைகள் மற்றும் பஞ்சு அரைக்கும், பஞ்சு பதப்படுத்தும் எந்திரம் உள்ளிட்ட 11 எந்திரங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story