நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ


நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ
x

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. நேற்று மாலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென்று புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்துக்கு ஏற்ப தீ மளமளவென்று குப்பை கிடங்கு முழுவதும் பரவி எரிந்தது.

குப்பையில் இருந்து எழும்பிய புகை பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. சங்கரன்கோவில் ரோடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை மற்றும் பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி தொடர்ந்து விடிய, விடிய நடைபெற்றது. இதனால் ராமையன்பட்டி சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்ததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.


Next Story