நூல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


நூல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 31 May 2023 1:00 AM IST (Updated: 31 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நூல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கழிவு துணிகளில் இருந்து நூல் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்கு வெளியே வந்தனர். அப்போது திடீரென்று தொழிற்சாலைகளுக்குள் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

இதற்கிடையில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால், கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 20 லாரிகளில் தண்ணீர் கொண்டு தீயை தீயணைப்பு துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் எந்திர உராய்வு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த தீ விபத்தில் எந்திரங்கள், நூல்கள் உள்பட சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story