தனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம் - தடுப்பு சுவரின் கற்களை பெயர்த்து வீசிய அலைகள்...!
கடல் சீற்றத்தால் தனுஷ்கோடியில் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பயங்கர கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்புச் சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கின்றது.
அரிச்சல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டயர்களும் பஞ்சராகி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அதே நேரம் கடல் அலையின் வேகத்தை சுற்றுலாப் பணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story