பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: உடல் சிதறி 3 பேர் பலி..!


பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: உடல் சிதறி 3 பேர் பலி..!
x

கடலூர்: எம்.புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் வாணவேடிக்கை தயாரிக்கு பட்டாசு ஆலை இன்று இயங்கி வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.

இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.


Next Story