4-வது குடிநீர் திட்டப்பணிகள்; ஆணையாளர் ஆய்வு


4-வது குடிநீர் திட்டப்பணிகள்;   ஆணையாளர் ஆய்வு
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் மேட்டுப்பாளையம் நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 4-வது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி மற்றும் அன்னூர் பகுதியில் குறுக்களியாம்பாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.


Next Story