திருப்பூரில் மத்திய குழு அதிகாரிகள் திடீர் ஆய்வு


திருப்பூரில் மத்திய குழு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் குடி பெயர்ந்து தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஓரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற இந்தத் திட்டம் முறையாக செயல்படுகிறதா? என டெல்லியில் இருந்து மத்திய குழு அதிகாரி சுரேஷ் நரேந்திரராவ் நேற்று ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம், ராயர் பாளையம், மேற்கு பல்லடம், பி.டி.ஓ. காலனி, அவினாசி தெக்கலூர், காமநாயக்கன் பாளையம், பெரியயிபாளையம். செங்காளிபாளையம், திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, சத்யாநகர், குப்பாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மஹராஜ், பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம், மண்டல வருவாய் ஆய்வாளர் கார்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story