பெட்டிக்கடைகளில் அலுவலர்கள் சோதனை


பெட்டிக்கடைகளில் அலுவலர்கள் சோதனை
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பெட்டிக்கடைகளில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி பகுதியில் உள்ள பெட்டிகடைகளில், சுகாதாரத்துறை அலுவலர்கள் தினேஷ், கவியரசன் வினோத்குமார், சக்தி, ஆன்டனிராஜன், மணிகண்டன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில், புகையிலை, குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். பின்னர் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். குட்கா விற்றாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story