வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
x
திருப்பூர்


காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காங்கயம் நகராட்சி உரக்கிடங்கில் உரம் தயாரிக்கும் பணிகள், வாரச்சந்தை வளாகத்தில் தினசரி சந்தைக் கடைகள் கட்டும் பணி, நகராட்சி அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடப் பணி மற்றும் சத்யா நகர், அண்ணா நகர், கே.ஜி.கே.நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகங்கள் கட்டும் பணிகளை நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார். அந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story