வேளாண் பண்ணைக்கருவிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு


வேளாண் பண்ணைக்கருவிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
திருப்பூர்


குடிமங்கலம் வட்டாரத்தில் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ள வேளாண் பண்ணைக்கருவிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

எண்ணெய் வித்துப்பயிர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகள் தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்றதாக நிலத்தை பண்படுத்தும் வகையில் டிராக்டரால் இயங்கக்கூடிய சுழல் கலப்பைகள், தார்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

அந்தவகையில் குடிமங்கலம் வட்டாரம் குப்பம்பாளையம் கிராமத்தில் 2 விவசாயிகளுக்கு மானிய விலை திட்டத்தின் கீழ் சுழல் கலப்பை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொண்டம்பட்டி மற்றும் ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை கருவிகளை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா, உதவி வேளாண்மை அலுவலர் கோதண்டபாணி ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பண்ணை கருவிகளின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.


Next Story