நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசோதனை


நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசோதனை
x

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமிற்கு திருவண்ணாமலை மண்டல இணை பதிவாளர் கா.நடராசன் தலைமை தாங்கினார். பொது விநியோக திட்ட துணை பதிவாளர்சா.ஆரோக்கியராஜ், திருவண்ணாமலை சரக துணை பதிவாளர்மு.வசந்தலட்சுமி,பொது விநியோக திட்ட அலுவலக கண்காணிப்பாளர்இரா.தீபன் சக்கரவர்த்திஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை நடத்தினர்.இதில் 300-க்கும் மேற்பட்ட நியாயவிலை கடை விற்பனையாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


Next Story