திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை 121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பொது மேலாளர் மல்லையா ஆய்வு


திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை  121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்  பொது மேலாளர் மல்லையா ஆய்வு
x

திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த சோதனையை ரெயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு செய்தார்.

சேலம்

சூரமங்கலம்,

121 கிலோமீட்டர் வேகம்

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வுக்காக நேற்று சென்னையில் இருந்து தனி ரெயில் மூலம் சேலம் வந்தார்.

வரும் வழியில் அவர் திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை 48 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார்.

தண்ணீர் சிந்தவில்லை

அவ்வாறு சோதனை ஓட்டம் நடத்தியதில் தண்டவாளங்களில் அதிர்வலைகள் ஏற்படவில்லை. தண்டவாளங்கள் நல்ல உறுதி தன்மையுடன் இருப்பதாகவும், மேலும் ரெயிலில் சோதனையின் போது வைக்கப்பட்ட தண்ணீர் நிரப்பிய டம்ளரில் இருந்து தண்ணீர் வெளியே சிந்தவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை முடித்த பின்னர் சேலம் வரும் தண்டவாளப்பாதையில் முக்கிய இடங்களில் பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக உயர் அதிகாரிகள் உடன் வந்தனர்.


Next Story