செங்கோட்டை-புனலூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


செங்கோட்டை-புனலூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நவீன இலகு ரக பெட்டிகளை இணைத்து செங்கோட்டை-புனலூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

நவீன இலகு ரக பெட்டிகளை இணைத்து செங்கோட்டை-புனலூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மின்மயமாக்கும் பணி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ேகரள மாநிலம் புனலூர் ரெயில் நிலையம் வரை மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றி ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சுமார் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த வழித்தடத்தில் தற்போது மின்மயமாக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரெயிலை இயக்கி சோதனை

இந்த நிலையில் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, கொல்லம்-சென்னை எழும்பூர் ரெயில்களில் நவீன இலகு ரக பெட்டிகளை (எல்.எச்.பி.) இணைத்து இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு நவீன இலகு ரக பெட்டிகள் இணைக்கப்பட்ட தனி ரெயிலில் அதிகாரிகள் புறப்பட்டனர். அப்போது, 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

5 குகைகள்

மேலும், கேரள மாநிலத்தில் முற்றிலும் மலைப்பகுதியான 5 குகைகள் கொண்ட இந்த ரெயில் வழித்தடத்தில் நவீன இலகு ரக பெட்டிகளை இணைத்து ரெயிலை இயக்கும்போது ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா?, அப்பகுதியில் உள்ள சீதோசன நிலைக்கு ஏற்ப பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த சோதனை ஓட்டத்தின்போது, ரெயில்வே அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story