ஆசனூர் வாகன எடைமேடையில் சோதனை ஓட்டம்


ஆசனூர் வாகன எடைமேடையில் சோதனை ஓட்டம்
x

எடைமேடையில் சோதனை ஓட்டம்

ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் 16.2 டன் எடைக்கு கீழேயுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் அந்த வழியாக செல்லும் வாகனங்களை எடை போட்டு அனுப்பி வைத்தனர். இன்று (அதாவது நேற்று) முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போடப்படும். அதில் 16.2 டன் எடைக்கு கீழேயுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story