சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்


சோலைக்கொட்டாய்  அரசு பள்ளி  மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்  மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்
x

சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்பித்தல், கற்றல் பணிகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவகுமார், பள்ளி துணை ஆய்வாளர் இளமுருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Next Story