சேலம் மாவட்டத்தில் நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி கடும் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி கடும் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

நூல் விலை உயர்வு

சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி தொழில் உள்ளது. இந்த தொழிலுக்கு தேவையான நூல் ஆந்திராவில் இருந்தும், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ெகாண்டு வரப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட பஞ்சு நூல் ரூ.18 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

அப்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் நூல் விலையை குறைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நூல் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் ஒரு கிேலா ரூ.15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் பஞ்சு நூல் விலை உயர்ந்து வருகிறது.

உற்பத்தி பாதிப்பு

இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும் போது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற 50 கிலோ எடை கொண்ட பஞ்சு நூல் தற்போது ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாரத்திற்கு 2 நாட்கள் ஜவுளி உற்பத்தி பணி நிறுத்தப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story