காட்டுமன்னார்கோவில்வடவாற்றில் பிணமாக மிதந்த ஜவுளிக்கடை ஊழியர்போலீஸ் விசாரணை


காட்டுமன்னார்கோவில்வடவாற்றில் பிணமாக மிதந்த ஜவுளிக்கடை ஊழியர்போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றில் ஜவுளிக்கடை ஊழியர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றில் உள்ள தண்ணீரில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள், காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், இறந்தவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவரது அடையாளங்கள் மூலம், அவர் யார்? என்பது குறித்து விசாரணையை தொடங்கினார்கள்.

ஜவுளிக்கடை ஊழியர்

அதில், இறந்தவர் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (வயது 60) என்பதும், இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வருவதாக காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, கோவிந்தராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராசு தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story