திருவட்டாரில் 2 கடைகளில் ரூ.12 லட்சம் ஜவுளி-பாத்திரங்கள் திருட்டு;போலீசார் விசாரணை


திருவட்டாரில் 2 கடைகளில் ரூ.12 லட்சம் ஜவுளி-பாத்திரங்கள் திருட்டு;போலீசார் விசாரணை
x

திருவட்டாரில் 2 கடைகளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஜவுளி மற்றும் பாத்திரங்கள் திருடி செல்லப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டாரில் 2 கடைகளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஜவுளி மற்றும் பாத்திரங்கள் திருடி செல்லப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடைகளில் திருட்டு

திருவட்டார் பஸ் நிலையம் அருகில் ஜவுளிக்கடை மற்றும் பாத்திரக்கடை ஆகியவை அடுத்தடுத்து உள்ளது. நேற்று முன்தினம் இரு கடைகளையும், அவற்றின் உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வழக்கம் போல் கடையை திறக்க வந்தனர். அப்போது 2 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. பாத்திரக்கடையில் ரூ.2 லட்சம் பாத்திரங்கள் திருட்டு போனதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காரில் வருவதும், அதைத்தொடர்ந்து அவர்கள் இரும்பு கம்பி மூலம் கடையின் பூட்டையும், கண்ணாடியையும் உடைத்து நொறுக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--


Next Story