தா.பேட்டை பெரியக்காண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தா.பேட்டை பெரியக்காண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

தா.பேட்டை பெரியக்காண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

தா.பேட்டை, ஜூலை.7-

தா.பேட்டையில் பிள்ளாதுறை செங்குந்தர் முதலியார் தெருவில் உள்ள பெரியக்காண்டி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மங்களஇசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், அனுக்கை, யாகசாலை பிரவேசம், பிம்பசுத்தி, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், இரண்டாம் கால யாகம் பூஜை, மூலமந்திர ஹோமம், விசேஷ சந்தி, நாடி சந்தானம், வேத பாராயணம், கடம்புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து விநாயகர், முருகன், பெரியக்காண்டி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான செல்லாண்டியம்மன், வீரமலை சுவாமி, கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சாமி, பாப்பாத்தி அம்மன் ஆகியவற்றிற்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story