தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில்20-ந் தேதி முதல் நெல்கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்கலெக்டரிடம் மனு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 20-ந் தேதி முதல் நெல்கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 20-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
நெல் அறுவடை பணி
தடப்பள்ளி -அரக்கன்கோட்டை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி மற்றும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கொடிவேரி பாசன ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணி வருகிற 20-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்னதாக திட்டமிட்டு தொடங்க வேண்டும். அரக்கன்கோட்டை பாசன பகுதியில், கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், ஏலூர், நஞ்சை துறையம்பாளையம், தடப்பள்ளி பாசன பகுதியில், நஞ்சகவுண்டன்பாளையம், நஞ்சை புளியம்பட்டி, புதுக்கரைபுதூர், புதுவள்ளியம்பாளையம், காசிபாளையம், கூகலூர், கரட்டடிபாளையம், கருங்கரடு, சவண்டப்பூர், பெருந்தலையூர், மேவானி போன்ற இடங்களில் ஏற்கனவே இருந்த கொள்முதல் நிலைய எண்ணிக்கைப்படி தொடங்க வேண்டும்.
நடவடிக்கை
வருகிற 20-ந் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) கள்ளிப்பட்டி, ஏழூர், நஞ்சை புளியம்பட்டி, புதுவள்ளியாம்பாளையம், காசிபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், டி.என்.பாளையம் பகுதியில் திறக்கப்பட வேண்டும். மற்ற இடங்களில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.