சுங்காரமடக்கு தடுப்பணை நிரம்பியது
குடிமங்கலம் அருகே சுங்கார மடக்கு தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிரம்பிய தடுப்பணை
குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட குளம், குட்டை தடுப்பணைகள் உள்ளன.குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறுஓடை. உப்பாறு ஓடையின் குறுக்கே சுங்காரமடக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டஇடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. உப்பாறு ஓடையை சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுப்பாசனம் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.
தடுப்பணைகள் நிரம்பும்போது இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. குடிமங்கலம் பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமடையின் காரணமாக உப்பாறு ஓடையின் குறுக்கே சுங்கார மடக்கு பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியுள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது இந்த ஆண்டு குடிமங்கலம் பகுதியில் பருவமழை கை கொடுத்ததன் காரணமாக விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தடுப்பணை நிரம்பியுள்ளதால் தடுப்பணையை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதன் மூலம் கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.