வெளிநாட்டில் இறந்த டிரைவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி தாய் மனு

வெளிநாட்டில் இறந்த டிரைவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி தாய் மனு அளித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே செஞ்சேரி 2-வது வார்டை சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி கனகமணி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், எனது மகன் பார்த்தீபன் (வயது 27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே எனது மகனின் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story