அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி


அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி வதிரளான பக்தா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு ஆண்டு தோறும் தைலக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மகன்யாச ஜப ஹோமம் மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பின்னர் அஞ்சுவட்டத்தமனுக்கு தைலக்காப்பு சாத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story