சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா


சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா
x

சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

தஞ்சாவூர்

சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று ெ்காடியேற்றத்துடன் ெதாடங்கியது.

தைப்பூச திருவிழா கொடியேற்றம்

சுவாமிமலை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினார். கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

பஞ்சமூர்த்திகள் சாமிகள் புறப்பாடு

வருகிற 30-ந்தேதி இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ந்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story