தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (வயது 55). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2002-ம் ஆண்டு "பவாரியா" என்ற வட மாநில கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சேலம் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதாகி சென்னை சிறையில் உள்ள அசோக் என்ற லட்சுமணன், ராகேஷ் என்கிற குண்ட்டு, ஜெயில் தார் சிங், ஜெகதீஷ் ஆகியோரிடம் காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Next Story