தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனை
தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தினருடன் கூடிய மருத்துவமனையை விருதுநகர் இணை பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து 49 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன் மற்றும் சிறுதொழில் கடன் வழங்கும் அனுமதி ஆணைக்கடிதத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த மருத்துவமனை சிறந்த முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்டுறவு மருத்துவமனையை ஜமீன் கொல்லங் கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். கூட்டுறவு மருத்துவமனையை சுகாதார துறையின் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் பரிசீலனையில் உள்ளது என்றார்.
இதில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, மருத்துவமனை நிர்வாக தலைவர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.