தாளவாடி மருத்துவமனையில்பிரேத பரிசோதனைக்கூடம் அமைக்க வேண்டும்சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கோரிக்கை


தாளவாடி மருத்துவமனையில்பிரேத பரிசோதனைக்கூடம் அமைக்க வேண்டும்சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கோரிக்கை
x

பண்ணாரி எம்.எல்.ஏ.

ஈரோடு

சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று கேள்வி நேரத்தின்போது பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ. கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், 'பவானிசாகர் தொகுதி தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கூடம் இ்ல்லை. எனவே தாளவாடி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கூடம் அமைத்து தர வேண்டும்,' என்றார்.இந்த கேள்விக்கு பதில் அளித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் பிரேத பரிசோதனைக்கூடம் அமைப்பதில்லை. மற்ற மருத்துவமனைகளில் மட்டும் பிரேத பரிசோதனைக்கூடம் அமைக்கப்படுகிறது. எனவே உறுப்பினர் பண்ணாரி கூறிய மருத்துவமனை ஆய்வு செய்யப்படும்,' என்றார்.


Next Story