திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி
உப்பட்டி கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவர் கண் திறப்பு நிகழ்ச்சி, ஆடுகள் பலி கொடுப்பது, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். பின்னர் திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு பூஜை செய்தும், பூசாரிக்கு பரிவட்டம் கட்டியும் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர். இதையடுத்து தாலி அறுப்பு பூஜை நடந்தது. இதில் திருநங்கைகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story