தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா


தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் மேல் கடைவீதியில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று குன்னூர் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சார்பில், திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணர் கோவிலில் இருந்து, புலி வாகனத்துடன் பால்குடங்களை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க வி.பி.தெரு, பஸ் நிலையம், மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது. பின்னர் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து கிருஷ்ணாபுரம் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் வானவேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story