அரசு பள்ளி மாணவிகள் மேற்படிப்புக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உதவி
அரசு பள்ளி மாணவிகள் மேற்படிப்புக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உதவி செய்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மாலையாபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 13 மாணவிகள் மேற்படிப்புக்காக ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயில இடம் வாங்கி தருமாறு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் பேசினார்.
இதையடுத்து மாணவிகள் கேட்ட பாடப்பிரிவினை வழங்கி பள்ளியில் சேர்க்கை உறுதி செய்யப்பட்டது. மாணவிகள் கேட்டதும் பள்ளிக்கு நேரில் வந்து இடம் வாங்கி கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மாணவிகளின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்பிற்காக பள்ளியில், கல்லூரியில் பயில்வதற்கு தொடர்பு கொண்டால் கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று வேண்டிய உதவியை செய்து தருவேன் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.