தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேர் கைது


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேர் கைது
x

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேர் கைது

திருப்பூர்


திருப்பூர்

திருப்பூரில் தமிழக கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கவர்னர் உருவ பொம்மை

திருப்பூர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக கவர்னர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. தமிழ்நாட்டின் மக்களையும், தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்காமல் செயல்படும் கவர்னரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஸ் பாபு, அமைப்பாளர் அகிலன், மாநகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் அறிவரசு, அகிலன், தியாகு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

12 பேர் கைது

ஆர்ப்பாட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கவர்னர் உருவ பொம்மையை சிலர் தூக்கி வந்து எரிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் ஓடிச்சென்று உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து பிடுங்கி சென்றார்கள். இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி உருவ பொம்மையை தூக்கி வந்து எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story