கால்வாய் வசதி செய்து தரக்கோரி வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்
ஆம்பூர் அருகே கால்வாய் வசதி செய்து தரக்கோரி வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த வடச்சேரி ஊராட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 9 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 4-வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து 4-வது வார்டு உறுப்பினர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கழிவுநீர் கலந்த பாட்டிலுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீபா மற்றும் உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story