சத்துணவு ஊழியர்கள் தர்ணா
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை மாற்று அமைப்புகளிடம் வழங்குவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராணி தர்ணாவை தொடங்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் முருகேசன் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.