ரூ.6¼ கோடியிலான 132 வழக்குகளுக்கு தீர்வு


ரூ.6¼ கோடியிலான 132 வழக்குகளுக்கு தீர்வு
x
திருப்பூர்


தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 132 வழக்குகளில் ரூ.6 கோடியே ரூ.25 லட்சம் மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் நீதி மன்றம்

தாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவர் நீதிபதி எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதி மன்ற நீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வழங்காமுடி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

கூட்டத்தில் வழக்குகள் சமரச தீர்வு மூலம் 29 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 69 உரிமையியல் வழக்குகள், 14 குற்றவியல் சிறு வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள் 2, குடும்ப வன்முறை வழக்கு 1, குடும்ப வழக்கு 1, காசோலை மோசடி வழக்குகள் 6, வங்கி வராக்கடன் வழக்குகள் 8 உள்பட 132 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது.

ரூ.6¼ கோடி

இதன் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 731. மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 426 பயனாளிகள் பயன் பெற்றனர். தீர்வு காணப்பட்ட வழக்குக்காக சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story